முள்முருங்கையை கல்யாண முருங்கை என்று ஏன் அழைக்கிறார்கள்
பல சத்துக்கள் உள்ள கல்யாண முருங்கையை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நாமும் நம் முன்னோர்களை போல ஆரோக்கியமாக வாழலாம்.
முள்முருங்கையை கல்யாண முருங்கை என்று ஏன் அழைக்கிறார்கள்
தமிழ்நாட்டின் சில பகுதிகளில், திருமண சடங்குகளில் திருமணம் முடிந்து பிறகு மணப்பெண் புகுந்த வீட்டிற்கு பிரவேசிக்கும் முதல் நாள் கல்யாண முருங்கை மரத்தை அந்த மணப்பெண்ணை நடச்செய்வார்கள், ஏன்னென்றால் இந்த மரத்தை மணமகள் பயன்படுத்தி வலுவான கருப்பையைப் பெறவும், கருமுட்டைகள் அதிகரித்து அந்த வீட்டின் வாரிசை பெற்று எடுக்கவும் இந்த சம்பிரதாயத்தை மேற்கொள்கிறார்கள்.
சத்துக்கள்:
கல்யாண முருங்கையில் ஆல்கலாய்டுகள் ஃபிளாவனாய்டுகள், ப்டெரோகார்பன்கள், ட்ரைடர்பீன்ஸ், புரதங்கள், லெசித்தின் மற்றும் ஸ்டீராய்டுகள் உள்ளன. கல்யாண முருங்கையில் இருக்கும் சில முக்கியமான ஃபிளாவனாய்டுகள் எரித்ரினின்கள் ஏ, பி மற்றும் சி, இசாஜின் மற்றும் அல்பினம் ஐசோஃப்ளேவோன்.
கல்யாண முருங்கையின் நன்மைகள்:
- இருமல், சளியை குணமாக்கும்,
- கருப்பையை பலப்படுத்தும்,
- கருமுட்டைகளை அதிகரிக்க செய்யும்,
- இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது,
- உடல் சூட்டைக் குறைக்கும்,
- தோல் நோய்களை குணமாக்கும் - (இலைகளை வெளிப்புறமாகப் பயன்படுத்தவும்),
- மாதவிடாய் வலியைக் குறைக்கும்,
- தாய்ப்பாலை அதிகரிக்கும்,
- எலும்புகளை வலுப்படுத்தும்,
- மலச்சிக்கலை போக்கும்,
- நாடா புழு, வட்ட புழு மற்றும் நூல் புழுவை வெளியேற்றும்,
- வாத மூட்டு வலியைப் போக்கும்,
- கண் பிரச்சினைகளை போக்கும்.
பல சத்துக்கள் உள்ள கல்யாண முருங்கையை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நாமும் நம் முன்னோர்களை போல ஆரோக்கியமாக வாழலாம்.